ஒஸ்லோவில் காவற்துறையின் கருத்துப் படி நான்கு தனிமைப் படுத்தப்பட்ட மீறல்களும், மற்றும் வணிகத் தடையை மீறிய வழக்கும் பதிவில் உள்ளதாகவும், மேலும் ஒன்பது வழக்குகள் விசாரணை நடை பெறுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் ஒஸ்லோ காவல்துறை ஆய்வாளர் மோர்டன் ரெபன் கூறுகையில், மீறல் விதிகளின் தீவிரத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றும், தொற்று நோயைக் கட்டுப்படுத்த அனைவருக்கும் சமூகத்தில் அக்கறை உள்ளது என்றும், தொற்று நோயைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் ஒரு தனிநபருடைய விடயம் இல்லை என்றும் கூறி இருக்கின்றார்.
மேலும் அவர் கூறுகையில் தொற்றுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவருக்கு காவற்துறையால் அதிக பட்ச தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தனிமைப்படுத்தல் விதிகளை மூன்று முறை மீறியதாக கைது செய்யப்பட்ட நபருக்கும் இது பொருந்தும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
மற்றும் மார்ச் 25 ஆம் திகதி ஸ்வீடனில் இருந்து வந்த 22 வயது இளைஞர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். அவர் மூன்று தடவைகள் விதிகளை மீறியதற்காக 40,000 kr அபராதம் பெற்றுள்ளார் என்றும் செய்திகள் கூறுகின்றன.