விடுதலைப்புலிகளுடனான போரின்போது காணாமல் போனதாகக் கூறப்படுபவர்கள் இறந்துவிட்டதாக சிறீலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கரை சந்தித்த சிறீலங்கா அதிபர் இந்த விடயத்தை தெரிவித்ததுடன், இச்சந்திப்பில் காணாமல் போனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான தனது திட்டங்களையும் எடுத்துக் கூறியுள்ளார்.
மேலும் காணாமல்போனவர்கள் உண்மையில் இறந்துவிட்டதாகவும், அவர்களில் பெரும்பாலோர் விடுதலைப் புலிகளால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அல்லது கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு அவர்கள் தொடர்பாக தேவையான விசாரணைகள் முடிந்ததும், காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு உரிய உதவிகளை வழங்கமுடியும் என்றும் சிறீலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார். இதேவேளை காணமல்போன அனைத்து தமிழர்களும் கோத்தாவின் பாதுகாப்பு அமைச்சின் கீழ் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.