முகநூலில் பதிவிட்டதால் பயங்கரவாதியாக்கப்பட்டார்!

You are currently viewing முகநூலில் பதிவிட்டதால் பயங்கரவாதியாக்கப்பட்டார்!

முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்க வவுனியா மாவட்ட தலைவருமான ஆனந்தவர்மன் எனும் அரவிந்தன் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பயங்கரவாதச் தடைச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று(07.07) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2024 மார்ச் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில், முகநூலில் பதிவுகள் இட்டதாக அவர் கைதாகி இருந்தார்.

சிஐடியினரால் குறித்த முகநூல் பதிவு தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்ட நிலையில், அவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply