முடிசூட்டு விழாவில் டயானாவை நினைவுபடுத்திய இளவரசி கேட் மிடில்டன்!

You are currently viewing முடிசூட்டு விழாவில் டயானாவை நினைவுபடுத்திய இளவரசி கேட் மிடில்டன்!

பிரித்தானிய மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவில், வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் மறைந்த டயானாவின் முத்து மற்றும் வைர காதணிகளை அணிந்து வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் 203 நாடுகளின் பிரிதிநிதிகள் கலந்துகொண்டனர். காலை 7 மணி முதல் மன்னரின் விருந்தினர்களான சுமார் 100 நாடுகளின் தலைவர்கள் லண்டனுக்கு வர தொடங்கினர்.

இந்த விழாவில் இளவரசர் வில்லியமுடன் கலந்துகொண்ட வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், திகைப்பூட்டும் தந்தம் கொண்ட அலெக்சாண்டர் மெக்குயின் உடையை அணிந்திருந்தார். அத்துடன் தலைப்பாகைக்குப் பதிலாக வெள்ளி மற்றும் படிக்கத்தினால் ஆன கிரீடம் அணித்திருந்தார்.

மேலும், அவரது மாமியார் மறைந்த டயானாவின் முத்து மற்றும் வைர காதணிகளை இந்த நிகழ்விற்காக கேட் அணிந்து வந்தது மனதைத் தொடும் வகையில் அமைந்தது.

இதில் முத்து காதணிகள் 1981ஆம் ஆண்டு இளவரசர் சார்லஸுடன் திருமணத்திற்கு முன்பு டயானாவுக்கு பரிசாக வழங்கப்பட்டதாகும். கவனத்தை ஈர்த்த வேல்ஸ் இளவரசி வேல்ஸ் இளவரசி தன் வாழ்வில் குறிப்பிடத்தக்க தருணங்களுக்காக, அலெக்சாண்டர் மெக்வீனை அணிய நீண்ட காலமாக தெரிவு செய்துள்ளார்.

முன்னதாக, நேற்றிரவு முடிசூட்டு விழாவிற்கு முன்பாக பக்கிங்காம் அரண்மனையில் நடந்த வரவேற்பில் கேட் கவனத்தை ஈர்த்தார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply