தென்னாபிரிக்காவுக்கு அழைக்கப்பட்டுள்ள ரஷ்ய அதிபர்! கைதுக்கு வாய்ப்புள்ளதா!!

You are currently viewing தென்னாபிரிக்காவுக்கு அழைக்கப்பட்டுள்ள ரஷ்ய அதிபர்! கைதுக்கு வாய்ப்புள்ளதா!!

சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள ரஷ்ய அதிபர் “விளாடிமிர் புதின்”, தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் உச்சிமாநாடொன்றில் கலந்துகொள்வதற்காக தென்னாபிரிக்கா வரவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் “Briks” கூட்டமைப்பின் உச்சிமாநாடு, தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் நிலையில், மேற்படி “Briks” கூட்டமைப்பின் தலைமைப்பொறுப்பில் இருக்கும் தென்னாபிரிக்கா, உறுப்பு நாடென்ற வகையில் ரஷ்யாவுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற கட்டமைப்பிலும் தென்னாபிரிக்கா உறுப்பு நாடாகவிருப்பதால், கடந்த மார்ச் மாதம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால், ரஷ்ய அதிபர் “விளாடிமிர் புதின்” எங்கிருந்தாலும் கைது செய்யப்பட வேண்டுமென விடுதுள்ள சர்வதேச பிடியாணையை, சர்வதேச குற்றவியல் நீதிமன்ற கட்டமைப்பின் உறுப்பு நாடென்ற வகையில் தென்னாபிரிக்கா நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போது, தென்னாபிரிக்க அரசே ரஷ்ய அதிபருக்கு அழைப்பு விடுத்துள்ளமையானது, தென்னாபிரிக்க அரச மட்டத்திலும், சர்வதேச அரசியல் மட்டத்திலும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி விட்டுள்ளது. குறிப்பாக, தென்னாபிரிக்காவின் பல்வேறு மாகாணங்களை தங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்குமிடையில் இது விடயம் தொடர்பில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்காவின் “Wes – Kaap” மாகாணத்தின் பிரதமராகவிருக்கும் “Alan Winde” தெரிவிக்கும்போது, ரஷ்ய அதிபர் தென்னாபிரிக்க மண்ணில் காலடி வைக்கும்போது அவரை கைது செய்ய தென்னாபிரிக்க மத்திய காவல்துறை தவறும் பட்சத்தில், தனது மாநிலத்தின் காவல்துறை அவரை கைது செய்யுமென தெரிவித்துள்ளதால், அவருக்கும் தென்னாபிரிக்க ஜனாதிபதி “Cyril Ramaphosa” வுக்குமிடையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

எனினும், தென்னாபிரிக்க ஜனாதிபதியின் தலைமைச்செயலாளர் தெரிவிக்கும்போது, ரஷ்ய அதிபர் தென்னாபிரிக்கா வரும்போது, அவருக்கான பாதுகாப்பை ரஷ்ய பாதுகாப்புத்தரப்பே வழங்குமெனவும், இதனால் அவரை கைது செய்வது என்பது வெறும் ´கனவாகவே இருக்குமெனவும் மாநில பிரதமர் “Alan Winde” இற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இதேவேளை, தென்னாபிரிக்காவின் மூன்றாவது பெரிய கட்சியான, “பொதுவுடைமை கொள்கைக்கான விடுதலை அமைப்பு” கருத்துரைக்கையில், தென்னாபிரிக்கா வரும் ரஷ்ய அதிபர் மேல் யாரும் கைவைக்க முடியாது எனவும், அமெரிக்க அதிபர் நினைத்தால்கூட அது நிறைவேறாது எனவும் தெரிவித்துள்ள்ளதோடு, ரஷ்ய அதிபரை தாம் தென்னாப்பிரிக்காவுக்கு முழுமையாக வரவேற்பதாகவும் அறிக்கையிட்டுள்ளது.

இக்கருத்து வேறுபாடுகளால், தென்னாபிரிக்க மத்திய அரசுக்கும், “Cape Town” மற்றும் “Pretoria” ஆகிய மாநில அரசுகளுக்குமிடையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் விவகாரத்தில், ரஷ்ய அதிபர் மீது சர்வதேச பிடியாணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விடுத்தபோது, அது ஒருதலைப்பட்சமானது என எதிர்ப்பு தெரிவித்திருந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உக்ரைன் விடயத்தில் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதாக விசனம் தெரிவித்ததோடு, சர்வதேச குற்றவியல் நீதிமன்ற கட்டமைப்பில் தென்னாபிரிக்க வகித்த பிரதான பொறுப்புக்களிலிருந்தும் விலகிக்கொள்வதாக அறிவித்திருந்தமையும் நினைவுகூரத்தக்கது.

தென்னாபிரிக்காவுக்கு அழைக்கப்பட்டுள்ள ரஷ்ய அதிபர்! கைதுக்கு வாய்ப்புள்ளதா!! 1

சோவியத் ஒன்றிய காலத்திலிருந்தே ரஷ்யாவோடு மிக நெருக்கமான உறவுகளை கொண்டிருக்கும் தென்னாபிரிக்கா, ரஷ்ய அதிபர் மீது விடுக்கப்பட்டுள்ள ஒருதலைப்பட்சமான பிடியாணையை எதிர்த்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்ற கட்டமைப்பிலிருந்தும் முழுமையாக விலகிக்கொள்ள வேண்டுமென தற்போது தென்னாபிரிக்க மத்திய அரசின் ஆளும் கட்சி முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற கட்டமைப்பானது நீதியான முறையில் கட்டமைக்கப்பட்டதல்ல என தெரிவிக்கும் தென்னாபிரிக்க மத்திய அரசின் ஆளும் கட்சி, குறிப்பாக ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களை குறிவைத்து தாக்குவதற்காகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்பட்டதாக கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த, சூடானின் ஜனாதிபதி தென்னாப்பிரிக்காவுக்கு வருகை தந்தபோது, அவரை கைது செய்ய தென்னாபிரிக்க அரசு மறுத்திருந்தமையும் இங்கு நினைவுகூரத்தக்கது.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தென்னாபிரிக்கா வருவாரா என்ற கேள்வியே உலகம் முழுவதும் நிறைந்துள்ளது.

 

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments