தமிழ் மக்களை முட்டாள்கள் ஆக்குகின்ற வேலைகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வருகின்றது. இதனை மக்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
புதிய ஐனாதிபதி புதிய அரசிற்கு ஆதரவளித்துச் செயற்படத் தயார் என கூட்டமைப்பு அறிவித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது..
அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கு அரசாங்கத்திற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று பிகிரங்கமாக அறிவித்திருக்கின்றமை ஆச்சரியத்திற்குரிய விடயமல்ல.
தங்களது நலன்களுக்காக செயற்படுகின்ற கூட்டமைப்பினர் எதனையும் செய்வார்கள் என்பதனை பல தடவைகள்; எங்கள் மக்களுக்கும் நாங்கள் சொல்லியும் இருக்கிறம்.
கடந்த ஐனாதிபதி தேர்தலில் எவரையும் நம்ப முடியாது. எந்தவொரு தரப்பும் வந்து எங்களுக்கு ஒன்றும் செய்யப் போவறதில்லை எல்லாரும் ஒன்று தான் என நினைத்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் கோட்டாபாய ராஐபக்ச வென்றார் என்றால் தமிழினம் என்றதே இலங்கைத் தீவில் இல்லாமல் போகும் என்ற அளவிற்கு மக்கள் மத்தியில் பயப்பீதியை ஏற்படுத்தி கூட்டமைப்பினர் பிரச்சாரத்தைச் செய்தனர்.
அந்தப் பயப்பீதியினால் கோட்டபாய ராஐபக்சவை தோற்கடிக்க வேண்டுமென்பதற்காக அவருக்கு எதிராக எமது மக்கள் வாக்களிக்கும் நிலைமையை ஏற்படுத்தினார்கள்.
இவ்வாறு கோத்தபாய ராஐபக்ச தொடர்பாக கூட்டமைப்பு செய்த பிரச்சாரம் என்பது அனைவருக்கும்; நன்றாக தெரியும்.ஆனால் தேர்தலில் யாரைத் தோற்கடிக்க வேண்டுமென்று தமிழ் மக்களிடம் வாக்களிக்ச் சொல்லிக் கேட்ட கூட்டமைப்பினர் இன்றைக்கு அவரே வெற்றி பெற்றிருக்கின்ற நிலைமையில்..
தாங்கள் சொன்ன எல்லாத்தையும் மறந்து போட்டு தங்களது தங்களது சுயநலன்களுக்காகவும் சலுகைகளுக்காகவும் இன்றைக்கு ஒரு பிரச்சனையும் இல்லாமல் அதே அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என்று அறிவிக்கிறது.
இந்த அரசுடன் இணைந்து செயற்பட்டால் தான் சலுகைகளைப் பெறாலம் என்பதற்காக அரசுடன் இணைந்து செயற்படத் தயார் என்று அறிவிக்கிறார்கள் என்றால் எந்தளவு தூரத்திற்கு முட்டாளாக்குகின்ற வேலையை செய்கிறார்கள் என்பதை தமிழ் மக்கள் உணர வேண்டும்.
ஆகவே தங்களது சுயநலன்கள் சலுகைகளுக்காகச் செயற்படுகின்ற கூட்டமைப்பினரை மக்கள் நிச்சளம் உணருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இவர்கள் மக்களுக்காக எதனையும் செய்யப் போவதில்லை.
தமது நலன்களுக்காகவே செயற்பட்டு வருகின்றார்கள். இந்த உண்மைகளை அனைவரும் தெளிவாகப் புரிந்து கொண்டு எதிர்காலத்தில் சிந்தித்துச் செயற்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.