“முதற் தற்கொடையாளர்” தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் வரலாறு பேசும் பதிவு.!

You are currently viewing “முதற் தற்கொடையாளர்” தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் வரலாறு பேசும் பதிவு.!

தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை 05.06.1974 அன்று சிறிலங்கா காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட தருணத்தில் சயனைட் அருந்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “முதற் தற்கொடையாளர்” தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 47ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.தமிழீன ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வி தரப்படுத்தலை வீசியபொழுது அதை எதிர்த்து தமிழினப் புரட்சிக்கு வித்திட்ட மாவீரம்.!

சிவக்குமாரை தேடி வீடுவீடாக வேட்டை!

இரவில் 200 காவல்த்துறையினர் ஈடுபட்டனர்யாழ்ப்பாணம், புதன் சிவகுமார் என்றவாலிபரை தேடி நேற்று முன்தினம் இரவு முதல் சுமார் 100 போலீசார்உரும்பராய் பகுதியில் வீடுவீடாகச் சென்று சோதனை நடத்தினர்.கைலாச பிள்ளையார் கோயில் அருகில் சிங்கள போலீஸ் அதிபர் சந்திரசேகரா மீது கைக்கொண்டு வீசிய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் சிவகுமார் போலீசாரால் தேடப்படுகின்றார் போலீசார் இதுவரை கச்சத்தீவிலும்  தேடுதல் நடத்தியதாகவும் சிவக்குமாரின் புகைப்படம் பிரதிகள் போலீசிடம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.பல வாரங்களாக தலைமறைவாக இருந்து கடந்த புதன்கிழமை பிற்பகல் சிங்கள பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நஞ்சுகுடித்து தற்கொலை செய்துசெய்துகொண்ட பொன்னுத்துரை சிவகுமாரன் ஒரு தியாகிகுரிய அந்தஸ்துடன் அஞ்சலி செலுத்தப்படடார்.அவரது மறைவு யாழ் குடா வெங்கும் வெறும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் தலைவர்கள் பலரும் அவரது இல்லத்திற்கு சென்றும் ஆஸ்பத்திரியில் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.தமிழ் இளைஞர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அன்னாருக்கு அஞ்சலி செலுத்தி துக்கம் கொண்டாடும் வகையில் யாழ்ப்பாணத்தில் கடையடைப்பு செய்யப்பட்டன. நகரிலும் சுற்றுப்புறங்களிலும் பாடசாலைகள் மூடப்பட்டன. மூடச்சுருங்கிய பாடசாலைகள் விட்டு பின்பிள்ளைகள் தாமாகவேஅதின்சேகரிப்பு செய்தார்கள்.சினிமா முதலான கேளிக்கைகள் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. மறைந்த சிவகுமாரின் சொந்த ஊரானஉரும்ரா ய்உட்பட பல இடங்கள் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.உரும்ரியில்பூரண துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.முக்கிய இடங்களில் கருப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்தவாயினும்போலீசார் அவற்றை அகற்றுவதில் ஈடுபட்டிருந்தனர்.நேற்றுவியாழக்கிழமை நடக்கவிருந்த இறுதிச் சடங்குக்கு அனைவரின் வேண்டுகோளுக்கிணங்க இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்குஉரும்பராய் வேம்பன்மயானத்தில் நடைபெறவிருக்கிறது.

“முதற் தற்கொடையாளர்” தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் வரலாறு பேசும் பதிவு.! 1

09/6/76 சிவகுமாரன் சமாதிக்கு மக்கள் அஞ்சலி

யாழ்ப்பாணம், உரும்பராய் அம்மன் மயானத்தில் அமைந்த சிவகுமாரன் சமாதிக்கு பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.அன்றுமத்தியானம் நடந்த மகேசுர பூஜையில் அனேக பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.அன்று மாலை சிவகுமாரன் சிலைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் மலர் மாலைகளை சூட்டினார்கள். சிலையில் உதயசூரியன் கொடியும் பறக்கவிடப்பட்டிருந்தது.ஒலிபெருக்கி இல்லாமலே கூட்டம் நடைபெற்றது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply