20.12.2020 நள்ளிரவிலிருந்து பிரித்தானியாவின் லண்டன் நகரம், முற்றான முடக்க நிலைக்கு வருவதால், நகரை விட்டு வெளியேறுவதற்கு மக்கள் முனைப்புடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வேறிடங்களிலிருந்து தற்காலிக காரணங்களுக்காக லண்டனில் தங்கியிருப்பவர்கள், நரகம் முடக்கப்படுவதற்கு முன்னதாகவே, தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கு முண்டியடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
“கொரோனா” வைரஸின் புதியவகையொன்று லண்டன் நகரில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இது மிக வேகமாக மக்கிளிடையே பரவிவருவதாகவும் செய்திகள் வெளிவந்திருந்த நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும்பொருட்டு, நகரத்தை முற்றாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பல்பொருள் அங்காடிகளில் பெருமளவில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதிலும், பொதுப்போக்குவரத்து இடங்களிலும் மக்கள் பெருமளவில் கூடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
20.12.2020 ஞாயிறு நள்ளிரவுக்குப்பின்னர், மறு அறிவித்தல் வரை லண்டன் நகரை விட்டு யாரும் வெளியேறவோ அல்லது நகருக்குள் உள்நுழையவோ அனுமதியில்லை என்ற நிலையில், பல்வேறு நாடுகளிலிருந்தும் லண்டன் நகருக்கான விமானசேவைகளும் இடைநிறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, “கொரோனா” தொற்று தொடர்பான விடயங்களை பிரித்தானிய அரசு சரியான முறையில் கையாளவில்லையென, லண்டன் நகரின் நகரபிதா ” Sadiq Khan” குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.