முல்லைத்தீவு – மாங்குளம் உதயசூரியன் நகர் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் விதுசன் எனும் 14 வயது மாணவன் நேற்று இரவு முதல் காணாமல் போயுள்ளார்.
நேற்று இரவு 7 மணியளவில் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக செல்வதாக கூறிச்சென்ற மாணவனை காணவில்லை என மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவனது உடைகள் கிணற்றடியில் காணப்படுவதுடன், அவர் எடுத்துச் சென்ற சவர்க்காரம் மாங்குளம் – துணுக்காய் வீதியில் அவரின் வீட்டுக்கு அருகில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் உள்ளது.
இந்த நிலையில் மாணவனுக்கு என்ன நடந்தது என்று பெற்றோர் குழப்பமடைந்துள்ளனர். குறித்த மாணவனை கண்டவர்கள் 0770871475 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.