முள்ளிவாய்க்கால் மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் 11 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் நினைவேந்தல் வாரத்தின் தொடக்க நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுடர் ஏற்றப்பட்டு தொடக்கிவைக்கப்பட்டுள்ளன.
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் குளத்தில் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ள அதேவேளை மற்றுமோர் இடத்தில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக மக்கள் சமூக இடைவெளிக்கு அமைவாக ஒன்றுகூடி பொதுச்சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளதுடன் நின்ற மக்கள் அனைவரும் தங்கள் கைகளில் மொழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செய்துள்ளார்கள்.
மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் தொடக்க நிகழ்வாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவேறு இடங்களில் இந்த நினைவு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ச்சியாக இந்த காலப்பகுதியில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நடவடிக்கை இடம்பெறும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளார்கள்.



