முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்- ஈபிடிபி, என்பிபி புறக்கணிப்பு!

You are currently viewing முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்- ஈபிடிபி, என்பிபி புறக்கணிப்பு!

முள்ளிவாய்க்கால் தமிழின இனப்படுகொலையை நினைவுகூர்ந்து நினைவு கூரப்படும் மே 18 – “தமிழின அழிப்பு நாள்” வாரம் ஆரம்பித்துள்ள நிலையில், யாழ் மாநகரசபையிலும் நேற்று வணக்கம் செலுத்தப்பட்டது.

யாழ் மாநகர முதல்வர் மதிவதனி தலைமையில் நடைபெற்ற இந்த வணக்க நிகழ்வின் போது, சபா மண்டபத்தில் வைக்கப்பட்ட பிரத்தியேக நினைவுப் படத்தின் முன்னால் ஈகச்சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நினைவுகூரல் நிகழ்வை ஈ.பி.டி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply