தமிழின அழிப்பின் 15 ஆம் ஆண்டிற்கான நினைவேந்தல் இன்று வட தமிழீழம் முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் பல்லாயிரம் மக்கள், மதத் தலைவர்கள் என பலர் ஒன்றுகூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழர்கள் அழுவதற்காகவல்ல மீண்டும் எழுவதற்காக என்று முள்ளிவாய்க்கால் இன்று தமிழ் மக்களுக்கு சொல்கின்றது
உறவுகளை இழந்தவர்களின் உறவினர்கள் பல பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்து நினைவேந்தலில் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பிரகடனமும் வாசிக்கப்பட்டது.
முக்கிய குறிப்பு
இந்த இனவழிப்பு யுத்தத்தின்போது சுமார் 150,000 வரையான தமிழ் மக்கள் பேரினவாத சிறீலங்கா ஆயுதப் படைகளால் இனவழிப்பு செய்யப்பட்டனர்.