முள்ளிவாய்க்கால் வாரத்தையொட்டி டென்மார்க் தலைநகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு!
டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தினால் நேற்று (15.05.2023) டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரசபை சதுக்கத்தில் கவனயீர்ப்பு நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. இந் நிகழ்வில் 2009 இல் தமிழினத்திற்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட இன அழிப்பை, இங்கு வாழும் டெனிஸ் மக்களுக்கும் மற்றும் வேற்றின மக்களுக்கும் எடுத்துரைக்கும் வகையில் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. தாயகத்தில் எம் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியை பறைசாற்றும் விதத்தில் பதாகைகள், விபரணப் படங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தியதுடன், பங்கு கொண்ட மக்களால், இன அழிப்பில் உயிர்நீத்த மக்களுக்கான வணக்க நிகழ்வும் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.
தொடர்ந்து இக் கவனயீர்ப்புப் நிகழ்வு நாளை 16.05 2023 மற்றும் 17.05.2023 இரு தினங்களும் Kongens Nytorv சதுக்கத்தில் நடைபெறவுள்ளது, அத்துடன் எதிர்வரும் 18.05.2023 அன்று டென்மார்க் தலைநகரில் நீதிக்கான ஏழுச்சிப் பேரணியும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.















ஆண்டுகள் கடந்து போயினும்.. ஆறாததும் யாராலும் ஆற்றுப்படுத்த முடியாததுமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை 14.05.2023 டென்மார்க்கின் கிறின்சட் நகரில் உள்ள தேவாலயத்தில், 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான விசேட நினைவேந்தலும் திருப்பலிப் பிரார்த்தனையும் மிகவும் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் நீதிக்கு மாறாக இனப்படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்கு மலர் வணக்கம் மற்றும் சுடர் வணக்கமும் பொதுமக்களால் செலுத்தப்பட்டு, சிறப்புரையும் இடம்பெற்றது. நினைவேந்தல் நிகழ்வின் நிறைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சியின் சிறப்பை எடுத்துரைத்து வருகை தந்தவர்களுக்கு கஞ்சி பரிமாறப்பட்டதோடு, நினைவேந்தல் நிகழ்வு நிறைவுபெற்றது.
டென்மார்க் வேல்முருகன் ஆலயத்தில் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு.
டென்மார்க் நெஸ்ர்வித் நகரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.