இன்று (20.02.2023) பெல்சியம் -அன்வேர்பன் மாநகரில் அமைந்துள்ள மாவீரர் நினைவுக்கல்லறையில் இன்று காலை அகவணக்கத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து ஈருருளிப்பயணம் பல கிராமங்கள் மற்றும் நகரங்களூடாகப் பயணித்து புரூசல் மாநகரத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றின்முன் கவனயீர்ப்புப் போராட்டத்துடன் ஈருருளிப்பயணம் தொடர்ந்தும் பயணிக்கவுள்ளது.
தொடர்ந்து பெல்சியம் , லக்சம்பேர்க், ஜேர்மனூடாக பிரான்ஸ் சென்று ஐரோப்பிய பாராளுமன்றம் ஊடாக சுவிஸ் நாட்டிற்குள் சென்று .06.03.2023 அன்று ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையை சென்றடையவுள்ளது.
ஈருருளிப்பயணத்தினை மேற்கொள்ளும் அறவழிப்போராட்டக்கார்ர்களை ஒவ்வொரு நாட்டு மக்களும் வரவேற்று, உணர்வெழுச்சியுடன் தங்களது ஆதரவினை வழங்குவதோடு, இப்போராட்டங்களில் இணைந்து கொள்ளுவதும் காலத்தின் கடமையென்பதை உணர்ந்து பயணிப்போம்.
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”
என்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணா அரசியல் எழுச்சியினை உளமேற்று பயணிப்போம்.
நாம் பூமிப்பந்திலே வாழ்கின்ற தனித்துவமும் விசேட பண்புகளும் கொண்ட ஒரு சிறப்புவாய்ந்த இனம் மிகவும் தொன்மை வாய்ந்த இனம் தனித்துவமான இன அடையாளங்களோடும் தேசிய இனக்கட்டமைப்போடும் வாழுகின்ற ஓர் இனம்.
தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”









