மூளையை பாதிக்கும் மருந்துகள்: பிரித்தானிய அரசின் அதிரடி முடிவு!

You are currently viewing மூளையை பாதிக்கும் மருந்துகள்: பிரித்தானிய அரசின் அதிரடி முடிவு!

பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் புழக்கத்தில் இருக்கும் குறிப்பிட்ட சில மருந்துகளால் மூளையை பாதிக்கும் பக்க விளைவுகளுக்கு வாய்ப்பிருப்பதாக கூறி தடை செய்ய முடிவு செய்துள்ளனர். அந்த மருந்துகளின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு மருத்துவரின் பரிந்துரைக்கு மட்டும் என பட்டியலில் இடம்பெறலாம் எனவும் கூறப்படுகிறது.

மருத்துவ கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்துள்ள ஆய்வில், மிகவும் அரிதான ஆனால் கொடிய மூளை பாதிப்புகளுக்கான அதிக வாய்ப்புகள் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

அந்த வகையில், Sudafed, Nurofen and Day & Night Nurse ஆகிய மருந்துகள் இனி புழக்கத்தில் இருக்காது என்றே தெரிய வந்துள்ளது.

இந்த மருந்துகள் அனைத்தும் பிரித்தானியர்கள் பரவலாக சளிக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த மருந்துகள் மூளைக்கான ரத்த ஓட்டத்தை நாளடைவில் குறைப்பதுடன் உயிருக்கு ஆபத்தான சிக்கல்கள் மற்றும் மரணத்தையும் ஏற்படுத்தக் கூடும்.

இதன் அறிகுறிகள் என தலைவலி, பார்வை கோளாறுகள், உளவியல் சிக்கல்கள், வலிப்பு மற்றும் மூளையில் வீக்கம் காணப்படலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments