ஜப்பான் கடற்கரையில் உள்ள ‘Princess Highway’ என்ற பயணக் கப்பலில் மேலும் 41 புதிய நபர்கள் கொரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்களுடன் மொத்தமாக கப்பலில் இருந்து 61 பேர் இப்போழுது கொரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கார்டியன்(Guardian) பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
கப்பலில் சுமார் 3,700 பேர் உள்ளனர், ஆனால் அறிகுறிகள் உள்ளவர்கள் மட்டுமே வைரஸுக்கு சோதிக்கப்படுகின்றனர்.
இப்போது பாதிக்கப்பட்ட 41 பேரில் 20 பேர் ஜப்பானியர்கள் என்று ஜப்பானின் சுகாதார அமைச்சர் கட்சுனோபு கேட்(Katsunobu Kate) கூறினார். கொரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டவர்கள் ஜப்பானில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்படவுள்ளனர்.