மோசடியை அம்பலப்படுத்திய இளைஞனுக்கு நெருக்கடி கொடுத்தால் சிக்கல் வரும்!

You are currently viewing மோசடியை அம்பலப்படுத்திய இளைஞனுக்கு நெருக்கடி கொடுத்தால் சிக்கல் வரும்!

விசா விநியோகத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடியை தனி ஒருவனாக இளைஞர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். எனவே தவறுகளை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும் என ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கேட்டுக்கொண்டார்.

அதனை விடுத்து அந்த இளைஞனுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தினால் அரசாங்கம் மீண்டும் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.அரசாங்கத்துக்கு எதிராக மீண்டும் சட்டத்தரணிகளும் மக்களும் ஒன்றிணைவார்கள் எச்சரித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பிரிவிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடல் (விசேட ஏற்பாடுகள்)திருத்தச் சட்டமூலம் (பராட்டே) என்பன மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இந்த எச்சரிக்கையை விடுத்த அவர் மேலும் பேசுகையில்,

அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமையை அந்த இளைஞர் பயன்படுத்தியுள்ளார்.இந்த இளைஞர் குறிப்பிட்ட விடயங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி,அது தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்தியதன் பின்னரே அமைச்சரவை பழைய முறைக்கு விசா விநியோகிக்க தீர்மானித்துள்ளது.

எனவே அரசாங்கம் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் அதனை விடுத்து இந்த இளைஞருக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் சட்டத்தரணிகளும், நாட்டு மக்களும் அந்த இளைஞனுக்கு சார்பாக செயற்படுவார்கள்.அரசுக்கு எதிராக மீண்டும் ஒன்றிணைவார்கள்.அரசு மீண்டும் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.கடந்த கால நிகழ்வுகளை அரசு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply