இரசிய உக்கிரேன் போரில் பல சிறீலங்கா இராணுவ சிப்பாய்கள் பலி!

You are currently viewing இரசிய உக்கிரேன் போரில் பல சிறீலங்கா இராணுவ சிப்பாய்கள் பலி!

மனித கடத்தல்காரர்களால் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து அனுப்பப்பட்ட இலங்கையர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

மேலும் இந்த சம்பவத்துடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கண்டறிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை

சட்டவிரோதமான வழிகளில் ரஷ்யா – உக்ரைன் போருக்காக ஓய்வு பெற்ற இலங்கை முப்படை வீரர்களை அனுப்பி ஆள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தொடர்பான தகவல்களை பெறுவதற்கு விசேட பிரிவொன்றை அமைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, பல்வேறு வழிகளில் ரஷ்யா-உக்ரைன் போருக்குப் புறப்பட்ட முப்படைகளின் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள், அவர்கள் புறப்பட்ட திகதிகள், ஒருங்கிணைந்த நபர்கள், நிறுவனங்கள், தொலைபேசி எண்கள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் பாதுகாப்பு அமைச்சின் 0112441146 என்ற தொலைபேசி எண்ணுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என தொடர்புபட்ட நபர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மனித கடத்தலில் ஈடுபடுபவர்கள் அல்லது அதற்கு ஆதரவானவர்கள் தொடர்பான தகவல்கள் இருந்தால், மேற்கண்ட தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறும் பாதுகாப்புச் செயலாளர் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறார்.

இது இலங்கைப் பிரஜைகளின் உயிரைப் பாதுகாக்கும் செயற்பாடு என்பதால், அனைவரும் விசேட கவனம் செலுத்தி தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments