யாழில் இன்றிரவும் கன மழை, வெள்ள அனர்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு!

You are currently viewing யாழில் இன்றிரவும் கன மழை, வெள்ள அனர்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு!

ஏற்கனவே கிடைக்கப்பெற்ற மழையினால் மண்ணில் நீர் நிரம்பிய நிலையில் 50 மி.மீ மழை கிடைத்தாலே வெள்ள அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு என யாழ் பல்கலைக்கழக புவியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நா. பிரதீபராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தினூடாக கடந்து சென்ற புரேவி புயலானது வலுக்குறைந்து தீவிர தாழமுக்கமாக மன்னார் வளைகுடாக் கடற்பகுதியில் கடந்த 48 மணி நேரமாக ஒரு இடத்திலேயே நிலைகொண்டுள்ளது.

இது அடுத்த 16 மணித்தியாலங்கள் அதே இடத்தில் நிலைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாழமுக்கம் கரையை கடக்கும் வரை யாழ் மாவட்டம் மன்னார் மாவட்டமும் கன மழைக்கான வாய்ப்புகளை கொண்டிருக்கிறது.

இன்று இரவு அல்லது நாளை அதிகாலை வரை கனமழைக்கான வாய்ப்பு உண்டு. சில வேளை அதற்கு முன் தாழமுக்கம் கரையைக் கடந்தால் மழை குறைவடையலாம்.

ஆனாலும் தற்போதய நிலையின்படி தாழமுக்கம் அதே இடத்தில் தொடர வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே மண்ணில் நீர் நிரம்பிய நிலையில் 50 மி.மீ மழை கிடைத்தாலே வெள்ள அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. மக்கள் அவதானமாக செயற்படவும் என்றார்.

பகிர்ந்துகொள்ள