யாழில் எவருடைய உதவிகளுமில்லாமல் கல்வியில் முன்னுக்கு வந்த செல்வி.கேசவன் உஷாவிற்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.
அந்த பெண்ணுடைய தந்தையும், தாயும் தமிழீழத் தேசியத்திற்காக முன்நின்று உழைத்தவர்கள். இறுதிப்போர்க் களங்களில் வீரத்துடன் போராடிய தந்தை வீரச்சாவடைந்து உரமாகிப்போக, அதே போர்க்களத்தில் போரிட்டுப் படுகாயமடைந்து ஆரோக்கியமிழந்த தாயின் அன்றாட ஏழ்மையான வாழ்வில் இப்போது தன்னைத்தலை நிமிர்த்திக் கொண்டாள் என்றே சொல்லவேண்டும்.
வறுமையான வாழ்வில் இருந்துகொண்டு இந்த நிலையினை அடைந்ததை எண்ணியே பலரும் பாராட்டி வருகின்றனர்.