யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களது எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 24 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
யாழ். மாவட்ட செயலகத்தின் கொவிட்-19 புள்ளிவிபர அறிக்கையின் அடிப்படையில் இவ்விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்பயைடில், ஓகஸ்ட்-19 முதல் 25 வரையிலான 07 நாட்களில் இவ்வாறு 24 கொவிட்-19 மரணங்கள் யாழ். மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளன.
ஓகஸ்ட் மாதத்தில் யாழ். மாவட்டத்தில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்கள் தொடர்பான விபரம்…
ஓகஸ்ட் – 02 – 04 பேர்
ஓகஸ்ட் – 03 – 02 பேர்
ஓகஸ்ட் – 04 – 02 பேர்
ஓகஸ்ட் – 06 – 02 பேர்
ஓகஸ்ட் – 07 – 03 பேர்
ஓகஸ்ட் – 08 – 03 பேர்
ஓகஸ்ட் – 09 – 03 பேர்
ஓகஸ்ட் – 10 – 06 பேர்
ஓகஸ்ட் – 11 – 05 பேர்
ஓகஸ்ட் – 12 – 04 பேர்
ஓகஸ்ட் – 13 – 05 பேர்
ஓகஸ்ட் – 14 – 07 பேர்
ஓகஸ்ட் – 15 – 03 பேர்
ஓகஸ்ட் – 16 – ஒருவர்
ஓகஸ்ட் – 17 – 02 பேர்
ஓகஸ்ட் – 18 – 06 பேர்
ஓகஸ்ட் – 19 – ஒருவர்
ஓகஸ்ட் – 20 – 05 பேர்
ஓகஸ்ட் – 21 – 03 பேர்
ஓகஸ்ட் – 22 – 02 பேர்
ஓகஸ்ட் – 23 – ஒருவர்
ஓகஸ்ட் – 24 – 06 பேர்
ஓகஸ்ட் – 25 – 06 பேர்
இதன் மூலம் இந்த மாதத்தின் முதல் 25 நாட்களிலும் 82 கொவிட்-19 மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதையடுத்து யாழ். மாவட்டத்தில் ஓகஸ்ட்-25 வரையில் கொவிட்-19 காரணமாக உயிரிழந்துள்ளவர்களது எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். மாவட்டதிதில் இதுவரை ஏற்பட்ட கொவிட்-19 மரணங்கள் தொடர்பான விபரம்…
மொத்த உயிரிழப்பு பிரதேச செயலர் பிரிவு வாரியாக
யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் – 46 பேர்
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் – 30 பேர்
உடுவில் பிரதேச செயலர் பிரிவில் – 23 பேர்
நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் – 23 பேர்
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் – 19 பேர்
சங்கானை பிரதேச செயலர் பிரிவில் – 16 பேர்
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் – 16 பேர்
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் – 14 பேர்
தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் – 10 பேர்
கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் – 06 பேர்
வேலணை பிரதேச செயலர் பிரிவில் – 05 பேர்
காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் – 02 பேர்
ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் – 03 பேர்