யாழில் தொடரும் சமூகத் துரோக செயற்பாடுகள்!

You are currently viewing யாழில் தொடரும் சமூகத் துரோக செயற்பாடுகள்!

யாழ்ப்பாணத்தில் 5 வயது சிறுவனை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட இளைஞருக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பெற்றோர் பாதுகாப்பில் இருந்த 5 வயது சிறுவனை, இளைஞர் ஒருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 19 வருட சிறைத்தண்டனை விதித்து , யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் தீர்ப்பளித்துள்ளார்.

இதேவேளை

யாழ்ப்பாணத்தில் 14 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞருக்கு 24 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 2021ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply