யாழில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு!

You are currently viewing யாழில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்  அதிகரிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக, யாழ் மாவட்டச் செயலகப் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சுஜித்குமார் லேணுகா ராணி தெரிவித்தார்.

பெண்களுக்கு எதிரான பால் நிலை வன்முறையை இல்லாhதொழிக்கும் 16 நாள்கள் விழிப்புணர்வு செயற்றிட்டம், இன்று (25), யாழ். மாவட்டச் செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் பினன்ர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தரைத்த அவர், யாழ். மாவட்டத்தில், 2019ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான வன்முறை ச்பவங்கள் தொடர்பில் 1,076 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் எனினும் இவ்வருடம் ஜனவரி மாதத்திலிருந்து செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில், பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான முறைப்பாடுகள் 1,011 கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் கூறினார்.

இவற்றில் பெரும்பாலானவை, வீட்டு வன்முறை, திருமணத்துக்கு முன், திருமணத்துக்குப் பின் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்களே முறைப்பாடுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும், அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில், 18-25 வயதுக்கிடைப்பட்ட பெண்களே இவ்வாறு வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்களெனவும், சுஜித்குமார் லேணுகா ராணி தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள