யாழில் வயலில் இருந்து ஆணொருவரது சடலம் மீட்பு!

You are currently viewing யாழில் வயலில் இருந்து ஆணொருவரது சடலம் மீட்பு!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு முன்னால் உள்ள வீதிக்குள் காணப்படும் வயலில் இருந்து ஆணொருவரது சடலம் உருக்குலைந்த நிலையின்  நேற்றையதினம்(19) மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக காணப்படுபவர் யாரென தெரியவராத நிலையில், அவருக்கு அண்ணளவாக 50 வயது இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அவரது சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயமாலசிங்கம் மேற்கொண்டார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply