யாழ்ப்பாணம் – தென்மராட்சி பகுதியில் 18 வயதான யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (23 . 2.2024) இரவு சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
யுவதியின் சடலம் சாவகச்சேரி – டச்சு வீதியிலுள்ள வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சடலம் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.