வெற்றிலைக்கேணியில் ஏற்பட்ட விபத்தும் ஊடகவியலாளருக்கு சிறீலங்கா காவற்துறையின் அச்சுறுத்தலும்!

You are currently viewing வெற்றிலைக்கேணியில் ஏற்பட்ட விபத்தும் ஊடகவியலாளருக்கு சிறீலங்கா காவற்துறையின் அச்சுறுத்தலும்!

வடமராட்சி கிழக்கு – வெற்றிலைக்கேணி பகுதியில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், மருதங்கேணியில் இருந்து வெற்றிலைக்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.

படுகாயமடைந்த இரு இளைஞர்களும் மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த மருதங்கேணி போக்குவரத்து சிறீலங்கா காவற்துறை விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். சம்பவ இடத்திற்கு மருதங்கேணி சிறீலங்கா காவற்துறையினர் சீருடையிலும் சிவில் உடையில் வந்திருந்தனர்.

சம்பவம் அறிந்து செய்தி சேகரிக்க சென்ற வடமராட்சி கிழக்கு ஊடகவியலாளரைச் செய்தி சேகரிக்க விடாது சிவில் உடையில் வந்த சிறீலங்கா காவற்துறையினர் தடுத்து நிறுத்தி அவரது தொலைபேசியையும் பறித்து அதில் பதிவு செய்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அழித்துள்ளதுடன் அவரது ஊடக அட்டை, மோட்டார்சைக்கிள் பத்திரங்கள் பறிமுதல் செய்து சிறிது நேரத்தில் மீண்டும் ஒப்படைத்துள்ளதுடன் அவர் கடுமையாக மிரட்டப்பட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளரை பணி செய்ய விடாது தடுத்து அச்சுறுத்திய சிறீலங்கா காவற்துறையினர் தொடர்பில் மருதங்கேணி சிறீலங்கா காவற்துறைபொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை சிவில் உடையில் வந்த சிறீலங்கா காவற்துறையினர் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்தியமையும் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments