யாழில் 7வயது சிறுமி உயிரிழப்பு!

You are currently viewing யாழில் 7வயது சிறுமி உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில், மூச்சு விட சிரமப்பட்ட சிறுமி ஒருவர் செவ்வாய்க்கிழமைஉயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியைச் சேர்ந்த வயது – 07 என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி செவ்வாய்க்கிழமை (21) மாலை சுவாசிப்பதற்கு சிரமப்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். வலிப்புடன், நுரையீரலில் ஏற்பட்ட கிருமித்தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply