யாழ்ப்பாணத்தில் கடற் தொழிலாளர்கள் பெரும் கண்டனப் போராட்டம் !

You are currently viewing யாழ்ப்பாணத்தில் கடற் தொழிலாளர்கள் பெரும் கண்டனப் போராட்டம் !

இந்திய இழுவைப் படகுகளின் அத்து மீறிய செயலைக் கண்டித்து யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாச சம்மேளனத்தால் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.

நேற்று (01.09.2023) வெள்ளிக்கிழமை, முற்பகல் -10.30,மணிக்கு நடைபெற்ற இப்போராட்டத்தில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவிலான கடற்தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இப் போராட்டத்தின் நிறைவில் குறித்த பிரச்சினை தொடர்பிலான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று யாழ்.மாவட்ட அரச அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது. இந்தக் கடலை நம்பியே எமது குடும்ப வாழ்வினை மேற்கொண்டு வருகின்றோம் இந்நிலையில் தற்போது இந்திய இழுவைப் படகுகளின் அத்து மீறிய வருகையால் சொல்லனாத் துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றோம் .

கடந்த காலத்தில் இலங்கை இந்திய மீனவர்கள் பல்வேறு கட்டப்பேச்சு வார்த்தைகளை பல்வேறு இடங்களில் மேற்கொண்டோம்.

இறுதியில் அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ளன.

இது தொடர்பிலான போராட்டங்கள் இடம்பெற்றன இவை தொடர்பிலான எதுவிதமான ஆக்க பூர்வமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை

எனவே இழுவைப் படகுகளின் அத்துமீறிய அடாவடித் தொழில் முறையினை உடனடியாக நிறுத்தி எமது நாட்டின் கடல் எல்லைக்குள் அத்து மீறி நுளைந்து எமது கடல் வளத்தை அழித்தும் சூரையாடியும் எமது மீனவர்களின் தொழில் உபகரணங்களை அழித்துச் செல்வதனையும் உடனடியாகத் தடுத்து நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் இழுவைப்படகுத் தொழிலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் நாம் தொடர் போராட்டங்களை நடாத்தத் தயாராகவுள்ளோம் என்பதனையும் தங்களுக்குத் தாழ்மையுடன் அறியத் தருகின்றோம் எனவும் யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாச சம்மேளனத்தால் யாழ்.மாவட்ட அரச அதிபரிடம் ஒப்படைக்கப்பட்ட மகஜரில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கடற் தொழிலாளர்கள் பெரும் கண்டனப் போராட்டம் ! 1

யாழ்ப்பாணத்தில் கடற் தொழிலாளர்கள் பெரும் கண்டனப் போராட்டம் ! 2

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply