யாழ். மாதகல் கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் இன்று (11) அதிகாலை சடலமாக கரை ஒதுங்கியுள்ளார்.
மாதகல் குசுமாந்துறையைச் சேர்ந்த திலீபன் (வயது-32) என்ற மீனவரே இவ்வாறு சடலமாக கரை ஒதுங்கியுள்ளார்.
குறித்த மீனவர் தொழிலுக்குச் சென்ற படகு மாதகல் கடற்பரப்பில் 200 மீற்றர் தூரத்தில் கவிழ்ந்து காணப்பட்டுள்ளது.
அதனை அடுத்து உள்ளூர் மீனவர்களினால் படகு மீட்கப்பட்டதுடன், உயிரிழந்த மீனவரின் சடலமும் மீட்கப்பட்டது.
மீனவரின் படகு மீது கடற்படையினரின் படகு மோதியே விபத்து ஏற்பட்டுள்ளது என உள்ளூர் மீனவர்கள் குற்றச்சாட்டும் நிலையில் கடற்படையினர் அதனை மறுத்துள்ளனர்.
இதேவேளை
யாழ் – ஊர்காவற்றுறையில் சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஊர்காவற்றுறை – நாரந்தனை வடக்கில் நேற்று காலை குறித்த இடம்பெற்ற சம்பவத்தில் விஜயேந்திரன் ஆரணன் (வயது 4) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.
சிறுவனின் தந்தை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில், கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் காணாமல் போயுள்ளான். இதனையடுத்து பெற்றோர் தேடிய நிலையில், சிறுவன் கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.