பிரித்தானியரால் 1948இல் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை தமிழர்கள் அடிமைகளாக்கப்பட்டு, தமிழர்தாயகம் அபகரிக்கப்பட்டு, எமது வளங்கள் , உடமைகள் அழிக்கப்பட்டு, வகை தொகையின்றி படுகொலைகள் செய்யப்பட்டு வருவதோடு தமிழின அழிப்பு தொடந்த வண்ணமே உள்ளது.
தமிழின விடுதலைக்காய் பல ஆயிரம் உயிர்த்தியாகங்கள் செய்தும் பல இலட்சம் உயிர்கள் பறிக்கப்பட்டும் எமக்கான நீதி மற்றும் எமது உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், இன்று வரை எமது உரிமைகளுக்காகவும் தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டியும் தாயகம் , புலம்பெயர் தேசமெங்கும் தொடர்ந்து போராடி வருகிறோம்.
அன்பான உறவுகளே
சிங்களபெளத்த பேரினவாத அரசு தமது 75 ஆவது சுதந்திர நாளைக் கடைப்பிடிக்கும் இச்சூழலில் தமிழர்களின் 75ஆண்டு அடிமை வாழ்வை வெளிப்படுத்து பெப்ரவரி 4ஐ கரிநாளாக வெளிப்படுத்தி, தாயகம் மற்றும் புலம்பெயர் நாடுகளில் ஒழுங்குபடுத்தப்படுகின்ற , கரிநாள் போராட்டங்களில் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டு, சிறிலங்காவின் ஒற்றையாட்சிக்குள் தமிழர் வாழமுடியாது. தமிழர்கள் இதுவரை ஏற்றுக்கொள்ளாத 13ஐ எதிர்க்கின்றோம்.தமிழர்களுக்கு தமிழீழமே வேண்டும் என்பதை உரத்துக்கூறுவோம்.
ஒன்றுபடுங்கள்! தமிழீழமே எமக்குத் தேவையென தமிழர்களாய் உலகத்திற்கு செய்தி சொல்வோம்.