யாழ்ப்பாணத்தில் மேலும் 6 பேர் சாவு!

You are currently viewing யாழ்ப்பாணத்தில் மேலும் 6 பேர் சாவு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொவிட் -19 நோயினால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதன்படி – யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுழிபுரத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரும், சாவகச்சேரியைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரும், காரைநகரைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரும், யாழ். வேம்படியைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவரும், அரியாலையைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

தென்மராட்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மீசாலை மேற்கைச் சேர்ந்த 91 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொவிட் -19 தொற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொவிட் -19 நோயினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 317ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை

வடக்கு மாகாணத்தில் நேற்று பிசிஆர் பரிசோதனை மூலம் 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 289 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 37 பேர்-

வவுனியா விமானப்படை முகாமில் 27 பேர், வவுனியா மாவட்ட வைத்தியாசாலையில் 03 பேர், செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் 03 பேர், நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் 02 பேர், பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்,

யாழ்.மாவட்டத்தில் 17 பேர்-

யாழ்.போதனா வைத்தியசாலையில் 11 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 02 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 02 பேர், நொதேர்ன் சென்றல் மருத்துவமனையில் ஒருவர், காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒருவர்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 05 பேர்-

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 07 பேர்-

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர், இரணைமடு விமானப்படை முகாமில் 03 பேர், பளை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

மன்னார் மாவட்டத்தில் 05 பேர்-

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர், மன்னார் கடற்படை முகாமில் ஒருவர், வெள்ளாங்குளம் விமானப்படை முகாமில் ஒருவர் ஆகியோர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply