யாழ். குடாநாட்டில் கொரோனா தொற்று பரவல் மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து வரும் நிலையில் கடந்த 9 நாட்களில் 423 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட கொவிட்-19 புள்ளிவிபர அறிக்கையின் அடிப்படையில் இவ்விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்பயைடில், ஜூலை 01 முதல் 09 வரையான நாட்களில் மட்டும் இவ்வாறு 423 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜூலை – 01 – 36 பேர்
ஜூலை – 02 – 41 பேர்
ஜூலை – 03 – 63 பேர்
ஜூலை – 04 – 71 பேர்
ஜூலை – 05 – 25 பேர்
ஜூலை – 06 – 64 பேர்
ஜூலை – 07 – 50 பேர்
ஜூலை – 08 – 25 பேர்
ஜூலை – 09 – 48 பேர்
இவ்வாறு இந்த மாதத்தின் முதல் 9 நாட்களில் மேலும் 423 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஜூலை-09 வரையான நாட்களில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 5,749 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் ஜூலை 01 முதல் 09 வரையான நாட்களில் மட்டும் இவ்வாறு 12 கொவிட்-19 மரணங்கள் யாழ். மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளன.
ஜூலை – 01 – 4 மரணங்கள்
ஜூலை – 02 – 2 மரணங்கள்
ஜூலை – 04 – ஒரு மரணம்
ஜூலை – 05 – ஒரு மரணம்
ஜூலை – 06 – 3 மரணங்கள்
ஜூலை – 07 – ஒரு மரணம்
இதையடுத்து யாழ். மாவட்டத்தில் ஜூலை-09 வரையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 107 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். மாவட்டதிதில் இதுவரை ஏற்பட்ட கொவிட்-19 மரணங்கள் தொடர்பான விபரம்,
மொத்த உயிரிழப்பு பிரதேச செயலர் பிரிவு வாரியாக
யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் – 33 பேர்
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் – 12 பேர்
நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் – 12 பேர்
உடுவில் பிரதேச செயலர் பிரிவில் – 09 பேர்
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் – 08 பேர்
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் – 08 பேர்
சங்கானை பிரதேச செயலர் பிரிவில் – 08 பேர்
தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் – 05 பேர்
கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் – 03 பேர்
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் – 03 பேர்
வேலணை பிரதேச செயலர் பிரிவில் – 03 பேர்
காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் – 02 பேர்
ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் – ஒருவர்