யாழ். குடாவை மிரட்டும் கொரோனா: 9 நாட்களில் 423 பேருக்கு தொற்று – 12 பேர் உயிரிழப்பு!

You are currently viewing யாழ். குடாவை மிரட்டும் கொரோனா: 9 நாட்களில் 423 பேருக்கு தொற்று – 12 பேர் உயிரிழப்பு!

யாழ். குடாநாட்டில் கொரோனா தொற்று பரவல் மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து வரும் நிலையில் கடந்த 9 நாட்களில் 423 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட கொவிட்-19 புள்ளிவிபர அறிக்கையின் அடிப்படையில் இவ்விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்பயைடில், ஜூலை 01 முதல் 09 வரையான நாட்களில் மட்டும் இவ்வாறு 423 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜூலை – 01 – 36 பேர்

ஜூலை – 02 – 41 பேர்

ஜூலை – 03 – 63 பேர்

ஜூலை – 04 – 71 பேர்

ஜூலை – 05 – 25 பேர்

ஜூலை – 06 – 64 பேர்

ஜூலை – 07 – 50 பேர்

ஜூலை – 08 – 25 பேர்

ஜூலை – 09 – 48 பேர்

இவ்வாறு இந்த மாதத்தின் முதல் 9 நாட்களில் மேலும் 423 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஜூலை-09 வரையான நாட்களில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 5,749 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் ஜூலை 01 முதல் 09 வரையான நாட்களில் மட்டும் இவ்வாறு 12 கொவிட்-19 மரணங்கள் யாழ். மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளன.

ஜூலை – 01 – 4 மரணங்கள்

ஜூலை – 02 – 2 மரணங்கள்

ஜூலை – 04 – ஒரு மரணம்

ஜூலை – 05 – ஒரு மரணம்

ஜூலை – 06 – 3 மரணங்கள்

ஜூலை – 07 – ஒரு மரணம்

இதையடுத்து யாழ். மாவட்டத்தில் ஜூலை-09 வரையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 107 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். மாவட்டதிதில் இதுவரை ஏற்பட்ட கொவிட்-19 மரணங்கள் தொடர்பான விபரம்,

மொத்த உயிரிழப்பு பிரதேச செயலர் பிரிவு வாரியாக

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் – 33 பேர்

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் – 12 பேர்

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் – 12 பேர்

உடுவில் பிரதேச செயலர் பிரிவில் – 09 பேர்

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் – 08 பேர்

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் – 08 பேர்

சங்கானை பிரதேச செயலர் பிரிவில் – 08 பேர்

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் – 05 பேர்

கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் – 03 பேர்

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் – 03 பேர்

வேலணை பிரதேச செயலர் பிரிவில் – 03 பேர்

காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் – 02 பேர்

ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் – ஒருவர்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments