யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் புதிய விமான சேவைகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் காத்திரமான பங்களிப்பை மேற்கொள்ளும் என்பதில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது.
யாழ்ப்பாண விமான நிலையத்தின் விமான சேவைகளை விரிவுபடுத்துவது தொடர்பில் விமான சேவைகள் நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருகின்ற நிலையில் சேவைகளை விரிவு படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும்.
அந்த வகையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் பொதுமக்கள் காத்திருப்பு பகுதி வேலைகள் முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில் அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறதாக தெரிவித்துள்ளார்.
ஆனாலும் யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு பொருத்தமானது என அமேரிக்க விமானம் தரையிறங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.






