யாழ்ப்பாணத்தில் கஞ்சா விநியோகித்து வந்த முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவரை மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சுழிபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய முச்சக்கர வண்டிச் சாரதியே யாழ்ப்பாணம் நகரில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 2 கிலோ கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக யாழ்ப்பாணம் மாவட்ட சிறீலங்கா குற்றத் தடுப்பு காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ். நகரில் கஞ்சா விநியோகிக்கும் முச்சக்கரவண்டி சாரதி கைது!
