கடைக்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக யாழ். நகருக்கு சென்ற வர்த்தகர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். முத்தமிழ் வீதி, கொட்டடி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னையா பிறேமானந் (வயது 58) என்ற வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று வியாழக் கிழமை பிற்பகல் 1 .15 மணியளவில் யாழ். நகருக்கு சென்ற நிலையில், வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக மயங்கி விழுந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் உயிரிழந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டது.





