யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திரும்பிய 5 மாதக் குழந்தை திடீர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்திருக்கின்றது.
யாழ்.தென்மராட்சி- நுணாவில் பகுதியில் இடம்பெற்றுள்ள குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கடந்த 19ம் திகதி குழந்தையை ஏணையில்போட்டு ஆட்டும்போது குழந்தையின் தலை சுவரில் தவறுதலாக மோதியுள்ளது.
இதனையடுத்து குழந்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வீடு திரும்பிய 2 நாட்களின் பின்னர் குழந்தை திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குழந்தையை தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் இன்று அதிகாலை குழந்தை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது