ஆழிப்பேரலையில் உயிர் நீத்த உறவுகளிற்கு நினைவேந்தல்!

  • Post author:
You are currently viewing ஆழிப்பேரலையில் உயிர் நீத்த உறவுகளிற்கு நினைவேந்தல்!

ஆழிப்பேரலையின் தாக்கத்தில் உயிர் நீத்த எம் உறவுகளிற்கான நினைவேந்தல் இன்று மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலையில் இடம்பெற்றது.

ஆழிப்பேரலையில் உயிர் நீத்த உறவுகளிற்கு நினைவேந்தல்! 1

சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 15 வருடங்கள் ஆகின்ற நிலையில், நினைவேந்தல் நிகழ்வுகளை பல்வேறு தரப்பினரும் அனுஷ்டித்து வரும் நிலையில் மன்னார் மாவட்டத்திலும் சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்றன.

ஆழிப்பேரலையில் உயிர் நீத்த உறவுகளிற்கு நினைவேந்தல்! 2

சுனாமி ஆழிப்பேரலையின் 15ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (26) காலை நாடு பூராகவும் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது கொல்லப்பட்டவர்களுக்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்படி வடமராட்சி – உடுத்துறை நினைவாலயத்திலும் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலலுத்தினர்.

ஆழிப்பேரலையில் உயிர் நீத்த உறவுகளிற்கு நினைவேந்தல்! 3
பகிர்ந்துகொள்ள