தமிழ் தேசத்தின் வரலாற்றில் மாணவப் போராளியாகப் போராடி தன்னுயிர் நீத்த முதல் தற்கொடையாளன் தியாகி பொன்.சிவகுமாரனின் 50ஆவது ஆண்டு நினைவேந்தல் 05ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொதுநினைவுத் தூபியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.








