யாழ் நாவாந்துறை வசந்தபுரம் பகுதியில் கழிவுப் பொருட்களை வீசிச் செல்பவர்களை தடுத்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மக்கள் மாநகரசபை வாகனங்களை மறித்து போராட்டம்.
நாவாந்துறை ஆறுகால் மடம் குறுக்கு வீதியில் இறைச்சிக் கழிவுகள் கழிவுப் பொருட்கள் இறந்த விலங்குகள் என்பவற்றை இரவு வேளைகளில் கொண்டுவந்து வீசிச் செல்கின்றனர்.
அருகில் குடியிருப்பு , பாலர் பாடசாலை என்பன உள்ளபோதும் இரவு வேளைகளில் கழிவுகளை வீசிச்செல்கின்றனர்.காகங்கள் கழிவுகளை தூக்கிவந்து கிணற்றில் போடுகின்றது.நாய்கள் கழிவுகளை குடியிருப்புக்குள் இழுத்து வருகின்றன.இதனால் சுகாதார சீர்கேடுகளை சந்திக்கின்றோம் என மக்கள் குறிப்பிடுகின்றனர்.
மாநகரசபை உறுப்பினர் நிவாஹிர், பாலச்சந்திரன் ஆகியோரால் உடனடியாக வீதிவிளக்கு, கண்காணிப்பு கமரா பொருத்தித் தருவதாக தெரிவித்ததை தொடர்ந்து மாநகரசபை வாகனங்கள் விடுவிக்கப்பட்டன.தற்போது கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.