யாழ்.மாவட்டத்தில் சிறுவர்கள் உட்பட 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
யாழ்.பல்கலைகழக மருத்துவபீட முடிவுகளின்படி மாவட்டத்தில் 59 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி சண்லிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 27 (01 வயதுக்கு உட்பட்ட இரண்டு ஆண் குழந்தைகள், 04, 08, 09 வயதுகளை உடைய சிறுவர்கள், 16 வயதுடைய சிறுமியும் உள்ளடக்கம்) உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 (03 வயதுடைய சிறுமியும் உள்ளடக்கம்)யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 (14 வயதுடைய சிறுவனும் உள்ளடக்கம்) கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலை முடிவுகளின் படி 21 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதன்படிநல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 07 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 03 பேர் (15 வயதுடைய சிறுவனும் உள்ளடக்கம்) யாழ்.போதனா வைத்தியசாலையில் 03 பேர்,சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,திருநெல்வேலி நொதேர்ன் தனியார் வைத்தியாசாலையில் ஒருவரும் இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.