கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது மகளை வைத்தியரொருவரும், மூன்று தாதிய உத்தியோகத்தர்களும் இணைந்து வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்துள்ளதாகவும், எனது மகளின் மரணத்திற்கு நீதி வேண்டுமெனக் கோரியும் தந்தையாரொருவர் வட தமிழீழம் , யாழ். மருதனார்மடம் சந்திக்கு அருகில் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று காலை ஆரம்பமான குறித்த போராட்டத்தில் உயிரிழந்த தனது மகளின் புகைப்படம் மற்றும் எனது மகளின் மரணத்துக்கு நீதி வேண்டுமென எழுதப்பட்ட சுலோகத்தைத் தமது கைகளில் தாங்கி எதிர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் படுகொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் தந்தையார் இதுதொடர்பாக தெரிவிக்கையில்,
திடீர் மனநலப் பாதிப்புக்குள்ளான தனது மகள் கடந்த-2017 ஆம் ஆண்டில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் அங்கொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு ஒரு வைத்தியரும் மூன்று தாதிய உத்தியோகத்தர்களும் இணைந்து வன்புணர்வுக்குட்படுத்தியுள்ளனர்.