வடமராட்சி கிழக்கு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தமது பூர்வீக சொந்த நிலங்களில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயிகள் இருபத்து இரண்டு பேர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வடமராட்சி கிழக்கின் கட்டைக்காடு பச்சிலைப்பள்ளியின் இயக்கச்சி உட்பட்ட பகுதிகளில் நெற் செய்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த காணிகள் வனஜீவராஜிகள் திணைக்களத்திற்கு சொந்தமானவை என்று குற்றம்சாட்டியே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இருந்தபோதிலும் நீண்டகாலமாக தாம் தொடர்ந்தும் அந்தப் பகுதிகளில் நெற் செய்கையில் ஈடுபட்டுவருவதாகவும் குறித்த காணிகளுக்கான உறுதிகள் தம்மிடம் உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்த போதிலும் அதனைச் செவிமடுக்காமலேயே கைது இடம்பெற்றிருப்பதாக தெரியவருகிறது.