யேர்மனி பிறைங்போட் நகரத்தில் நடைபெற்ற தமிழின அழிப்புக் கண்காட்சி!

You are currently viewing யேர்மனி பிறைங்போட் நகரத்தில் நடைபெற்ற தமிழின அழிப்புக் கண்காட்சி!

யேர்மனி பிறைங்போட் நகரத்தில் தமிழின அழிப்புக் கண்காட்சி 7.5.2022 சனிக்கிழமை நகரமத்தியில் இடம்அபற்றது. இக்கண்காட்சியை பல்லின மக்கள் பார்வையிட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா சிங்கள இனவெறி அரசினால் தமிழீழ மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்பினை, வேற்றின மக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் யேர்மனியில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மே 4ஆம் திகதியிலிருந்து மே 17 ஆம் திகதிவரை இக்கவனயீர்ப்பு நிகழ்வுகள் தொடர்ச்சியாக பதினாறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது. சென்ற 04. 05. 2022 லண்டவ் (Landau) நகரிலும் மறுநாள் 05. 05. 2022 கால்ஸ்றூக Karlsruhe எனும் நகரிலும் இக்கவனயீர்ப்பு நிகழ்வுகள் மிகவும் உணர்வோடு நடாத்தபட்டன. தமிழின அழிப்பின் குறியீட்டு வடிவமாக வரையப்பட்ட ஓவியக் காட்சிப்படுத்தல்கள் பார்ப்பவர் மனங்களை மிகவும் பாதித்திருந்தது. இதே வேளை எமது மனிதநேயச் செயற்பாட்டாளர்களும், எமது இளையர்வர்களும் இணைந்து துண்டுப்பிரசுரங்களை வழங்கியும் தமிழின அழிப்பின் வலியினையும் எடுத்துவிளக்கினர்.

தொடர்ந்து இக்கவனயீர்ப்பு நிகழ்வுகள் கீழ்க்காணும் நகரங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

08. 05 Wuppertal

09. 05 Mönchengladbach

10. 05 Hagen

11. 05 Münster

12. 05 Oberhausen

13. 05 Soest

14. 05 Osnabrück

14. 05 Stuttgart

15. 05 Bielefeld

15. 05 München

16. 05 Hannover

17. 05 Berlin

இக்கவனயீர்ப்பு நிகழ்வுகளின் இறுதியாக மே 18 இன அழிப்பு நினைவுநாள் 18. 05. 2022 நினைவுப் பேரிணைவாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

“எதிரி ஈவிரக்கமற்றவன், போர்வெறிகொண்டவன் எமது தாயகத்தைச் சிதைத்து, எமது இனத்தை அழித்துவிடுவதையே இலட்சியமாகக் கொண்டவன்.”

“ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு எவ்வித காலவரம்பையும் நிர்ணயிக்க முடியாது. இறுதி இலட்சியத்தை அடையும்வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.”

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply