ரகசிய அமெரிக்க உளவு ஆவணங்களை கசியவிட்ட 21 வயது இளைஞர்!

You are currently viewing ரகசிய அமெரிக்க உளவு ஆவணங்களை கசியவிட்ட 21 வயது இளைஞர்!

உக்ரைன் போர் சம்பந்தப்பட்ட அமெரிக்க உளவுத்துறை ஆவணங்கள் கசிந்த சம்பவத்தில் 21 வயது சந்தேக நபர் FBI அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். உக்ரைன் போர் சம்பந்தப்பட்ட பல்வேறு தரவுகளை உள்ளடக்கிய அமெரிக்க உளவுத் துறையின் ரகசிய ஆவணங்கள் கடந்த வாரத்தில் இணையத்தில் கசிந்து உலக அளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ரகசிய ஆவணங்களில் இருந்து, ரஷ்யாவிற்கு சுமார் 40,000 ராக்கெட்டுகளை வழங்க எகிப்து ரகசியமாக திட்டமிட்டு இருந்தது மற்றும் போரில் பிரித்தானிய சிறப்பு ராணுவ படையின் பங்களிப்பு ஆகிய அடுத்தடுத்து திடுக்கிடும் விவரங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில் அமெரிக்க ராணுவ ரகசிய உளவு ஆவணங்கள் கசிந்த சம்பவத்தில், 21 வயது சந்தேக நபர் இன்று FBI அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபராக முன்னர் அடையாளம் காணப்பட்ட ஜாக் டீக்சீரா என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

FBI முகவர்கள் மாசசூசெட்ஸில் உள்ள அவரது வீட்டை ஆயுதங்களுடன் சுற்றி வளைத்து, டி-சர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்திருந்த 21 வயது இளைஞர் ஜாக் டீக்சீரா-வை (Jack Teixeira) கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர் ஜாக் டீக்சீரா, டெக்சீரா மாசசூசெட்ஸ் விமான தேசிய காவலர் பிரிவின் உறுப்பினர் என்று சட்ட அமலாக்க அதிகாரிகள் NBC செய்திக்கு தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments