இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவ வேண்டும் என்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கையை புலம்பெயர் தமிழ் உறவுகள் ஏற்றுக் கொள்ளக் கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் ராஜபக்ச தரப்பினரை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையே பிரதமர் ரணில் விக்ரமசிங்க எடுத்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொண்டுள்ளமைக்கு, அரச தலைவர் உள்ளிட்ட அவரது ஆட்சியை பாதுகாக்க முயற்சிக்கும் அனைத்து தரப்பினருமே பொறுப்புக் கூற வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.