ரணிலுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஜெனிற்றாவுக்கு விளக்கமறியல்!

You are currently viewing ரணிலுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஜெனிற்றாவுக்கு விளக்கமறியல்!

வவுனியாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதேவேளை, போராட்டத்தை வீடியோ எடுத்த பெண்ணை வவுனியா நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுத்துள்ளது.

வவுனியாவுக்கு நேற்று காலை வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாநகர சபை கலாசார மண்டபத்தில் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

ஜனாதிபதியின் விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்துக்குச் செல்லும் பாதையில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவுக்கு நேற்று போராட்டம் எதனையும் முன்னெடுப்பதற்கு வவுனியா நீதிவான் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலும் அவரும் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்துக்குள் செல்ல முற்பட்டனர். இதன்போது போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்திய பொலிஸார் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்க முடியாது என்றும், ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்க முடியும் என்றும் தெரிவித்தனர்.

இதனை மறுத்த காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகள் அனைவரையும் அனுமதிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்ப்பட்டது.

இதையடுத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றா மற்றும் போராட்டத்தை வீடியோ எடுத்த மீரா ஜாஸ்மின் ஆகிய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் நீதிமன்றக் கட்டளையை அவமதித்தமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை, அமைதிக்குப் பங்கம் விளைவித்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களில் வவுனியா பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறும், போராட்டத்தை வீடியோ எடுத்த பெண்ணுக்குப் பிணை வழங்கியும் வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments