ரம்பின் சமரச முயற்சி ; நிராகரித்த இந்தியா மற்றும் சீனா!

  • Post author:
You are currently viewing ரம்பின் சமரச முயற்சி ; நிராகரித்த இந்தியா மற்றும் சீனா!

லடாக் பகுதியில் சீன ராணுவம் படைகளை குவித்து வருவதால், இந்தியா, சீனா இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது. இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே சமரசம் செய்துவைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்தியா சீனா இடையே ஏற்பட்ட பிரச்னையில் மத்தியஸ்தம் செய்த தயார் என்று டிரம்ப் கூறிய நிலையில், இரு நாடுகளும் அதனை நிராகரித்துள்ளன.

மேலும், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் சீன விவகாரம் குறித்து பேசியதாகவும், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மிகப்பெரும் பிரச்சினை சென்றுகொண்டிருப்பதாகவும், இதனை சரிசெய்ய சமரசம் செய்துவைக்கத் தயார் என்றும் டிரம்ப் மீண்டும் கூறினார்.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய இந்திய மத்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, எல்லைப் பகுதியில் நிலவும் தற்போதைய பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வுகாண சீனாவுடன் பேசிவருவதாக தெரிவித்தார். ராணுவ மற்றும் தூதரக ரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், இருதரப்புக்கும் இடையே அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்த 1993ம் ஆண்டு முதலே குறைந்தபட்சம் 5 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்மூலம், சமரச முயற்சியை இந்தியா நிராகரித்துள்ளது. இதனிடையே, எல்லைப் பிரச்சினைக்கு அமெரிக்காவின் உதவி தேவையில்லை என்று சீன அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள