ரஷ்யாவால் உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!

You are currently viewing ரஷ்யாவால் உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!

உக்ரைனில் ககோவ்கா அணை உடைபட்டு ஏற்பட்ட வெள்ளத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த 5ஆம் திகதி ரஷ்ய ராணுவத்தினர் வான்வழி தாக்குதல் நடத்தியதில் ககோவ்கா அணை உடைந்து வெள்ளப்பெருக்கு உண்டாகியதில் உக்ரைன் பேரழிவை சந்தித்தது.

ஆனால், அணை உடைப்பு காரணம் நாங்கள் இல்லை என ரஷ்யா மறுத்தது. இந்த நிலையில் தான் ஐ.நா சபை எச்சரிக்கை ஒன்றை விடுத்தது.

அதாவது, உலகளாவிய உணவுச்சங்கிலியில் அணை உடைப்பினால் பாதிப்பு ஏற்படும் எனவும், லட்சக்கணக்கானோருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் கூறியது.

இதற்கிடையில் உக்ரைனின் பல நகரங்கள் வெள்ளத்தினால் மூழ்கிய நிலையில், 15க்கும் மேற்பட்டோர் பலியானதாக செய்திகள் வெளியாகின.

அத்துடன் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

எனினும், அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளதாக உக்ரைன் அரசு கூறியுள்ளது.

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆற்றின் கிழக்கு கரை மற்றும் உக்ரேனியக் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரையில் உள்ள நகரங்களுக்கு கட்டுப்பாடற்ற நீர் வெளியேறியதால், பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் அதிகாரிகள் மக்களை வெளியேற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply