ஐ.நா உயர்ஸ்தானிகரின் வாய்மூலமான அறிக்கை யை வரவேற்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி!

You are currently viewing ஐ.நா உயர்ஸ்தானிகரின் வாய்மூலமான அறிக்கை யை வரவேற்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி!

53ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஐ.நா உயர்ஸ்தானிகரின் வாய்மொழி மூலமான அறிக்கையில் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறியமை தொடர்பிலான பொறுப்புக்கூறலில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகி நிற்கிறது என்ற விடயம் மிகவும் அப்பட்டமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தினை ஏமாற்றுவதற்கான உத்திகளில் ஒன்றாக ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தின் செயலற்ற தன்மையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பொறுப்புக்கூறலின்றி நல்லிணக்கம் சாத்தியமில்லை என்பதும் அரசாங்கத்தின் சமகால அடக்குமுறைகள் பற்றியும் குறித்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நாம் ஐ.நா. உயர்ஸ்தானிகரின் வாய்மொழி மூலமான அறிக்கையை வரவேற்கின்றோம். ஆனால், குறித்த அறிக்கையில், இலங்கை அரசாங்கத்தின் அனைத்து விதமான செயற்பாடுகளுக்கும் அடிப்படையாக இருப்பது, சிங்கள பௌத்த பேரினவாதம் தான் என்ற விடயம் வெளிப்படுத்தப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

அதுமட்டுமன்றி, தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என்பதும், அதிகாரங்களை பகிர்வதற்கு அரசாங்கம் பின்னடிக்கின்றது என்ற விடயத்தினையும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள் என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

எம்மை பொறுத்தவரையில், தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட மக்கள்; அவர்களுக்கு பொறுப்புக்கூறப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பது நிலைப்பாடாகும்.

அத்துடன், இலங்கையில் நிரந்தரமான சமாதானம் ஏற்பட வேண்டுமானால், தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடியவாறான அரசியல் தீர்வு அவசியமாகிறது. அதனை எதிர்வரும் காலத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் மற்றும் அலுவலகம் கவனத்தில்கொண்டு தமது அறிக்கைகள் தீர்மானங்களில் உள்ளீர்க்க வேண்டும் என்பது கோரிக்கையாகவுள்ளது. அதற்கான அழுத்தங்களை எமது தரப்பிலிருந்து நாம் முழுமையாக வழங்குவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments